ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் இயக்கத்தில் வெளியான அடுத்த ‘பயணி’ மியூசிக் வீடியோ

Prabha Praneetha
4 years ago
ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் இயக்கத்தில் வெளியான அடுத்த ‘பயணி’ மியூசிக் வீடியோ

ஐஸ்வர்யா ரஜினிகாந்த், கோவிட் தொற்றுக்குப் பின் ஏற்பட்ட சோர்வை அனுபவித்து தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார் .

இதற்கிடையில், நான்கு மொழிகளில் வெளியிடப்படும் பன்மொழி ஆல்பம் பாடலுக்காக இயக்குனர்-பின்னணி பாடகர் கிட்டத்தட்ட 9 ஆண்டுகளுக்குப் பிறகு இயக்குனர் ஆக களமிறங்கியுள்ளார் .

அதன் பின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவான ’பயணி’ என்ற மியூசிக் ஆல்பம் சற்றுமுன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

நான்கு நிமிடங்களுக்கு மேல் இருக்கும் இந்த மியூசிக் வீடியோவில் பால் பாக்கெட் போடும் ஹீரோ தனது அம்மாவை அன்பாக கவனித்துக் கொள்வதும், காதலியிடம் தனது அன்பை வெளிப்படுத்தும் காட்சிகளும் உள்ளன.

ஒவ்வொரு காட்சியையும் கவிதை போல் வடிவமைத்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி உள்ளதாக நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகின்றனர்.

அனிருத் குரலில், ஜானி மாஸ்டர், ஸ்ரஷ்டி வர்மாவின் நடிப்பில், அன்கித் திவாரி இசையமைப்பில் விவேகா பாடல் வரிகளில் உருவாகியுள்ள இந்த மியூசிக் வீடியோ இணையதளங்களில் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4