ஹொரான மருத்துவமனையை சுகாதார அமைச்சகத்தின் கீழ் கொண்டுவர நடவடிக்கை!
#SriLanka
#Health
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 hour ago
தற்போது மேற்கு மாகாண சபையின் நிர்வாகத்தில் உள்ள ஹொரானா மாவட்ட பொது மருத்துவமனை சுகாதார அமைச்சகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
களுத்துறை, கொழும்பு மற்றும் இரத்தினபுர மாவட்டங்கள் முழுவதும் உள்ள இந்த வைத்தியசாலையில் தற்போது 544 படுக்கை வசதிகளும், 739 அங்கீகரிக்கப்பட்ட பணியாளர் எண்ணிக்கையும் உள்ளன.
ஏறக்குறைய பத்து லட்சம் மக்களுக்கு சுகாதார சேவைகளை வழங்கி வரும் இந்த மருத்துவமனை, மூன்றாம் நிலை மருத்துவ சேவைகளை வழங்கும் ஒரு மாவட்ட பொது மருத்துவமனையாகத் மேம்படுத்தப்படவுள்ளது.
மேற்கு மாகாண ஆளுநரின் ஒப்புதலைப் பெற்ற பின்னரே, மருத்துவமனையை சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சகத்திற்கு மாற்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே