துறைமுகத்துக்கு எண்ணெய் கப்பல் வரும் எனத் தெரிவித்த கருத்து பொய்: துறைமுக பொது ஊழியர் சங்கம்

Prathees
2 years ago
துறைமுகத்துக்கு எண்ணெய் கப்பல் வரும் எனத் தெரிவித்த கருத்து பொய்: துறைமுக பொது ஊழியர் சங்கம்

கொழும்பு துறைமுகத்திற்கு போதியளவு எண்ணெய் மற்றும் எரிவாயு கப்பல்கள் வந்து கொண்டிருப்பதாக துறைமுக அமைச்சர் தெரிவித்த தகவல்கள் அடிப்படை ஆதாரமற்றவை என அகில இலங்கை துறைமுக பொது ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போது இரண்டு எரிவாயு கப்பல்கள் கொழும்பு துறைமுகத்திற்கு வெளியில் நங்கூரமிடப்பட்டுள்ளதாகவும் டொலர் தட்டுப்பாடு காரணமாக எரிவாயுவை இறக்குவதில் தடை ஏற்பட்டுள்ளதாக அதன் பொதுச் செயலாளர் நிரோஷன் கோரகன தெரிவித்துள்ளார்.

கப்பல்கள் நிறுத்தப்படும் நேரத்திற்கு ஒரு நாளைக்கு ஒரு பெரிய தாமதக் கட்டணத்தை அரசாங்கம் செலுத்த வேண்டியிருந்தது என்றும் அவர் கூறினார்.

நாட்டின் பிரச்சினைகள் தொடர்பில் இவ்வாறான பொய்களைப் பரப்பாமல் மக்களுக்கு உண்மையைச் சொல்ல வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.

இவ்வாறான பொய்களை நாட்டுக்கு கூறுவது எதிர்காலத்தில் பொருளாதார நெருக்கடியை மேலும் மோசமாக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.