தற்போதை அரசாங்கத்தை ஆட்சியில் இருந்து நீக்கும் வரை நாட்டிற்கு ஒரு டொலர் பணத்தை கூட அனுப்பமாட்டோம்!- இலங்கையர்கள் அமைப்பு

#government #Dollar
Reha
2 years ago
தற்போதை அரசாங்கத்தை ஆட்சியில் இருந்து நீக்கும் வரை நாட்டிற்கு ஒரு டொலர் பணத்தை கூட அனுப்பமாட்டோம்!- இலங்கையர்கள் அமைப்பு

நாட்டின் தற்போதை அரசாங்கத்தை ஆட்சியில் இருந்து நீக்கி விட்டு, மக்கள் சார்பான அரசாங்கம் நாட்டிற்குள் ஆட்சியமைக்கும் வரை ஒரு டொலர் பணத்தை கூட நாட்டுக்கு அனுப்புவதில்லை என அவுஸ்திரேலியா, இத்தாலி, அமெரிக்கா உட்பட பல நாடுகளில் தொழில் புரியும் இலங்கையர்களை உறுப்பினர்களாக கொண்ட மாற்றத்திற்கான வெளிநாட்டு வாழ் இலங்கையர்கள் என்ற அமைப்பு முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

கோட்டாபய நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதற்கு பதிலாக மற்றவர்கள் மீது குற்றத்தை சுமத்த மேற்கொண்ட முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக அந்த சங்கத்தின் ஒருங்கிணைப்புச் சபையின் உறுப்பினர் மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.

முழு நாடும் மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கி, மக்கள் இயல்பு வாழ்க்கையை குறைந்த வசதிகளுடன் கூட கொண்டு நடத்த முடியாத சூழ்நிலையில், நாட்டின் தலைவர் இதனை விட பொறுப்புடன் தலையீடுகளை மேற்கொள்ள வேண்டும் என்பது எமது அமைப்பின் நம்பிக்கை.

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் அனுப்பிய பணத்தை நாடு வீழ்ச்சியடைந்த நேரத்தில் கூட தமது சுக போகங்களுக்காக பயன்படுத்திய தற்போது ஆட்சியில் இருக்கும் மற்றும் ஆட்சியில் இருந்த மோசடியான அரசியல்வாதிகள் இவற்றுக்கு பொறுப்பு கூற வேண்டும் எனவும் மனோஜ் கமகே மேலும் தெரிவித்துள்ளார்.