இந்திய கடன்களுக்கு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளனவா - அமைச்சர் பசில் பதில்

Prabha Praneetha
2 years ago
இந்திய கடன்களுக்கு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளனவா - அமைச்சர் பசில் பதில்

 

இந்தியாவிடமிருந்து பெறப்பட்ட 1 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி மருந்துகள் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை விரைவாக இறக்குமதி செய்வதற்கு பயன்படுத்தப்படும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று பிற்பகல் நாடு திரும்பிய பின்னர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கடனுதவி வழங்குவதில் இந்திய அரசாங்கம் முன்வைத்துள்ள நிபந்தனைகள் என்ன என ஊடகவியலாளர் ஒருவர் அமைச்சரிடம் கேட்டார். அவர் பதிலளித்தார்:

இந்தியாவிற்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த நிதியமைச்சர் பசில் ராஜபக்ச, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெயசங்கர் ஆகியோருடன் கலந்துரையாடினார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, டிஜிட்டல் மயமாக்கல், சுற்றுலா மற்றும் மீன்வளம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.