அவசரமாக பிரான்ஸ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கியமான வேண்டுகோள்

Nila
2 years ago
அவசரமாக பிரான்ஸ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கியமான வேண்டுகோள்

கிறேற்டெட் எமோன்த்ல் (Grated Emmental) எனப்படும் சீஸ் கொள்வனவு செய்திருந்தால் அதனை மீள ஒப்படைக்குமாறு பொது மக்களிடம் சுப்பர் மார்க்கெட்கள் கோரிக்கை விடுத்துள்ளது.

பிரான்ஸ் முழுவதும் உள்ள சுப்பர் மார்க்கெட்களில் மார்ச் மாதம்  3ஆம் திகதி முதல் 11ஆம் திகதிக்கு இடைப்பாட்ட காலப்பகுதியிலான இந்த சீஸ் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

குறித்த சீஸ் கொள்வனவு செய்திருந்தால் அதனை உட்கொள்ள வேண்டாம் எனவும் பொது மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

லே குறாஸே (Les Croisés) என அழைக்கப்படும் நிறுவனத்தின் தயாரிப்பான 500 கிராம் நிறையுடைய சீஸ் பக்கட்களிலேயே பிளாஸ்டிக் துண்டுக  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

500 கிராம் நிறையுடைய சீஸ் பக்கட்டில் மே மாதம் 2ஆம் திகதிக்கு முன்னர் பயன்படுத்தலாம் என பதிவிடப்பட்டிருக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பாதிப்புக்குள்ளான தயாரிப்புகள் எமோன்தெல் ப்றோன்ஸெ றபே (Emmental français rapé) என்று பெயரிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சீஸ் பக்கட்டிற்கு பிளாஸ்டிக் துண்டுகளையும் பார்க்க முடியாவிட்டாலும் அதை உட்கொள்ள வேண்டாம் என அரச தகவல் சேவையான றப்பல் கொன்ஸோ (Rappel Conso) வாடிக்கையாளர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

கொள்வனவு செய்தவர்கள் இருந்தால் அதனை சுப்பர் மார்க்கெட்களில் மீள ஒப்படைத்து பணத்தை மீளப்பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த மீளக்கோரல் நடவடிக்கை எதிர்வரும் மே மாதம் 11ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் அரச தகவல் சேவையான றப்பல் கொன்ஸோ (Rappel Conso) தெரிவித்துள்ளது.

 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!