பாகிஸ்தானில் இந்து மதத்தை சேர்ந்த18 வயது பெண் சுட்டு கொலை - என்ன காரணம்..?
இந்து மதத்தை சேர்த்த இளம்பெண்ணை இஸ்லாமிய மதத்தை சேர்ந்த இளைஞர்கள் நடுரோட்டில் வைத்து துப்பாகியால் சுட்டு கொன்றனர்.
பாகிஸ்தானில் பெரும்பான்மையினரான இஸ்லாமிய மதத்தினர் சிறுபான்மையினராக வாழ்ந்து வரும் சீக்கியம், இந்து, கிறிஸ்தவ மதத்தின் பெண்களை கடத்தி கட்டாய மதமாற்றம் மற்றும் திருமணம் செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.
இந்த நிலையில் பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாநிலம் ரோகி நகரில் இந்து மதத்தைச் சேர்ந்த பூஜா குமாரி (வயது 18) என்பவரை அதே பகுதியில் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த வாஹித் லஷ்கரி என்று இளைஞன் தனது நண்பர்களுடன் இணைந்து அந்தப் பெண்ணை கடத்தி கட்டாய மதமாற்றம் மற்றும் திருமணம் செய்ய முயற்சி செய்துள்ளனர். இந்த நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பூஜா குமாரியை அந்த இளைஞர் மற்றும் அவருடைய நண்பர்கள் இணைந்து நடுத்தெருவில் துப்பாக்கியால் சுட்டு விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டில் பூஜா குமாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் பூஜா குமாரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் கொலையின் முக்கிய குற்றவாளியான வாஹித் லஷ்கரி கைது செய்யப்பட்டுள்ளார். இது போன்று முன்னதாகவே பூஜா குமாரியை கடத்த முயற்சித்ததாகவும், இரண்டாவது முறையாக முயற்சித்த போது தடுக்க முயன்றதால் அவரை கொலை செய்ததாகவும் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இந்து மதத்தைச் சேர்ந்த இளம்பெண் கடத்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது