சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசிபிக் துறையின் தலைவர் சாங்யோங் ரீ ஓய்வு!

Mayoorikka
2 years ago
சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசிபிக் துறையின் தலைவர் சாங்யோங் ரீ ஓய்வு!

சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசிபிக் துறையின் தலைவர் சாங்யோங் ரீ ஓய்வு பெற முடிவு செய்துள்ளார்.

கடந்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்த அவர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் நிதியமைச்சர் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடினார்.

தென் கொரியாவின் மத்திய வங்கியின் தலைவராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசிபிக் துறையின் தலைவர் பதவி விலகியுள்ளார்.

தென் கொரியப் பொருளாதாரத்தில் உயர் பணவீக்கம் மற்றும் அதிகரித்து வரும் வட்டி விகிதங்களைக் கட்டுப்படுத்த அனுபவம் வாய்ந்த அதிகாரி ஒருவரின் சேவைகள் தேவைப்படுவதால், முன்னாள் IMF தலைவரை நியமிக்க தென் கொரியா முடிவு செய்துள்ளது.

அதன்படி, தென் கொரியாவின் மத்திய வங்கியின் புதிய தலைவராக சாங்யோங் ரீ இம்மாதம் 31ஆம் திகதி முதல் கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார்.