ஒரு கோடி ரூபா பெறுமதியான கஜமுத்துக்களை விற்கச் சென்ற முன்னாள் அமைச்சர் பண்டு கைது!

Prathees
2 years ago
ஒரு கோடி  ரூபா பெறுமதியான கஜமுத்துக்களை விற்கச் சென்ற முன்னாள் அமைச்சர் பண்டு கைது!

ஒரு கோடி  ரூபா பெறுமதியான கஜ முத்துக்களை விற்பனை செய்ய முற்பட்ட முன்னாள் அமைச்சரும் கம்பஹா மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பண்டு பண்டாரநாயக்க உள்ளிட்ட ஐவர் அம்பாறையில் நேற்று (25) பிற்பகல் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒரு ஆசிரியரும் அடங்குவதாக படை தெரிவித்துள்ளது.

முன்னாள் அமைச்சர் உள்ளிட்ட சந்தேகநபர்கள் அங்கு வந்து சொகுசு ஜீப்பை கைப்பற்றியுள்ளனர்.

கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய விசேட அதிரடிப்படையினர் அம்பாறை முகாமிற்கு அறிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த ளுவுகு அதிகாரிகள் ஜீப்பை நிறுத்திவிட்டு ஆசிரியரிடம் இருந்த மூன்று முத்துக்களை கைப்பற்றி உள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் அனைவரும் 60, 50, 40, 44 மற்றும் 38 வயதுடைய கம்பஹா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

சொகுசு ஜீப்பை மேலும் சோதனை செய்த குழுவினர் கைத்துப்பாக்கி, 8 துப்பாக்கி தோட்டாக்கள், மகசீன்இ கையடக்கத் தொலைபேசி உள்ளிட்ட பொருட்களை கைப்பற்றியுள்ளனர்.

அம்பாறை பிரதேசத்தில் நபர் ஒருவருக்கு முத்துக்களை விற்பனை செய்யச் சென்ற போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து முத்துக்கள் யாரிடம் கிடைத்தன என்பது குறித்தும் விசாரித்து வருவதாகவும் படை கூறுகிறது.

கைது செய்யப்பட்ட பாண்டு பண்டாரநாயக்க, இதற்கு முன்னர் முன்னாள் சமய விவகார அமைச்சராகவும், சுற்றாடல் பிரதி அமைச்சராகவும் இருந்துள்ளார்.