மோசடியான ஒப்பந்தத்தால் மின்சாரக் கட்டணம் கூடும் அபாயம்!

Mayoorikka
2 years ago
மோசடியான ஒப்பந்தத்தால் மின்சாரக் கட்டணம் கூடும் அபாயம்!

எரிபொருள்  தொடர்பாக தென்னாபிரிக்க நிறுவனமொன்றுடன் அரசாங்கம் பாரிய மோசடி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாகவும், அந்த மோசடி ஒப்பந்தம் காரணமாக எதிர்காலத்தில் மின்சாரக் கட்டணம் நிச்சயமாக அதிகரிக்கப்படும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இந்த ஊழல் ஒப்பந்தத்தின் மூலம் நடைமுறையில் உள்ள சந்தை விலையை விட அதிக விலைக்கும், நாட்டுக்குத் தேவையான அளவை விட அதிகமாக கொள்முதல் செய்யவும் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாவும் எதிர்க்கட்சித் தலைவர் வெளிப்படுத்தினார்.

சிறுவர்களை டிஜிட்டல்  உலகில் தலைநிமிர்ந்து செயற்படும் நோக்கில் செயற்படுத்தப்படுகின்றன டிஜிட்டல்  வகுப்புக்கான நவீன கணனி  தொழில்நுட்ப திரைகள்  மற்றும் நவீன கணினிகளை வழங்கும் பிரபஞ்சம் திட்டத்தின் 20 ஆவது கட்டம், நேற்று (25) முன்னெடுக்கப்பட்டது.

எட்டு இலட்சத்து நாற்பத்து ஆறாயிரம் (846,000) ரூபாய் பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறைக்கான கணினி திரைகள் மற்றும் கணினி  உபகரணங்களை மே/மினு/கீனதெனிய மகா வித்தியாலயத்திற்கு வழங்கப்பட்டது. அதன்பின்னர் அங்கு உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ,

கூடுதலான அதிகாரம் கொடுத்ததின் விளைவுகளை மக்கள் அனுபவிக்க நேரிட்டது வருந்தத்தக்கதான விடயம் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், மனச்சாட்சியற்ற அரசாங்கத்திடமிருந்து இதைத்தான் எதிர்பார்க்க முடியும் எனவும் தெரிவித்தார்.

அதிகாரம் இருந்தோ அல்லது இல்லாமலோ சேவையாற்றும் பாரம்பரியத்தை ஐக்கிய மக்கள் சக்தி நாட்டிற்கு அறிமுகப்படுத்தி ஒரு புதிய கலாசாரத்தை உருவாக்கியதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், சுகாதாரம் மற்றும் கல்வியை மேம்படுத்தும் தமது புண்ணிய பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

நவீன உலகில் டிஜிட்டல் எதிர்காலத்திற்காக இந்நாட்டின் எதிர்கால தலைமுறையை தொழில்நுட்ப திறமையாலும், ஸ்மார்ட் கணிணி திறமையாலும், அறிவை அடிப்படையாக கொண்ட நவீன தொழில்நுட்பத்தின் மூலம் இணைத்து  பூரணத்துவத்தை வழங்கும் நோக்குடன் எதிர்க்கட்சி தலைவரின் எண்ணக்கருவுக்கு அமைய நடைமுறைப்படுத்தப்படும் பாடசாலைகளுக்கு டிஜிட்டல் கணிணி உபகரணங்களை வழங்கும் பிரபஞ்சம் நிகழ்ச்சித்திட்டத்தின் 20 ஆவது கட்ட நிகழ்வு நேற்று (25) இடம் பெற்றது. 

தேசத்தின் தந்தை என போற்றப்பட்ட சுதந்திர இலங்கையின் முதல் பிரதமர் டி.எஸ்.சேனநாயக்க அவர்களின் 70 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு விசேட “பிரபஞ்சம்” நிகழ்ச்சியாக இது இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.