இலங்கை அரசால் தடைசெய்யப்பட்ட சில தமிழ் அமைப்புக்களை தடை நீக்கம் செய்ய அரசும் முடிவு செய்துள்ளது.

#SriLanka #Australia
Nila
2 years ago
இலங்கை அரசால் தடைசெய்யப்பட்ட சில தமிழ் அமைப்புக்களை தடை நீக்கம் செய்ய அரசும் முடிவு செய்துள்ளது.

வடக்கு, கிழக்கிற்கான அபிவிருத்தி நிதியமொன்றை ஸ்தாபிப்பதற்கு ஜனாதிபதிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையிலான ​நேற்று முன்தினம் சந்திப்பின்போது கவனம் செலுத்தப்பட்டிருந்தது.

இந்த நிதியத்திற்கு புலம்பெயர் அமைப்புகளின் நிதி உதவிகளை பெற்றுக்கொள்வது தொடர்பாக நேற்று முன்தினம் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஆராயப்பட்டதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த ஆட்சியின் போது 2016 ஆம் ஆண்டும் புலம்பெயர் அமைப்புகள் மற்றும் தனி நபர்கள் மீதான தடையை தளர்த்தும் வகையில் விடுக்கப்பட்டிருந்த அதிவிசேட வர்த்தமானியில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின் மூலம் 7 புலம்பெயர் அமைப்புகளுக்கு அரசாங்கம் கடந்த வருடம் மார்ச் மாதம் மீண்டும் தடை விதித்தது.

இதற்கமைய, பிரித்தானிய தமிழர் பேரவை, கனேடிய தமிழர் பேரவை, அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ் ஆகியன திருத்தப்பட்ட பட்டியலில் மீள இணைக்கப்பட்டன.

அத்துடன், உலகத் தமிழர் பேரவை, கனேடிய தமிழர் தேசிய அவை, தமிழ் இளைஞர் அமைப்பு அவுஸ்திரேலியா, உலக தமிழர் ஒருங்கிணைப்புக் குழு ஆகிய அமைப்புகளும் தடை செய்யப்பட்ட அமைப்புகள் பட்டியலில் சேர்க்கப்பட்டன. இதனைத் தவிர, இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து பல்வேறு நாடுகளில் வசித்துவரும் 388 பேரை தடை செய்யப்பட்டோர் பட்டியலில் மீளவும் இணைப்பதற்கு அரசாங்கம் கடந்த வருடம் நடவடிக்கை எடுத்திருந்தது.

இந்த நிலையில் டொலர் பற்றாக்குறையை தீர்ப்பதற்காக ஆஸ்திரேலிய தமிழ் அமைப்பு உள்ளிட்ட அமைப்புகள் மீதான தடை நீக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.