இலங்கைக்கு ஒரு புதிய தொடக்கமும் தேசிய மாற்றமும் தேவை-கர்தினால் மல்கம் ரஞ்சித்

Mayoorikka
2 years ago
இலங்கைக்கு ஒரு புதிய தொடக்கமும் தேசிய மாற்றமும் தேவை-கர்தினால் மல்கம் ரஞ்சித்

இலங்கைக்கு ஒரு புதிய தொடக்கமும் தேசிய மாற்றமும் தேவை என  கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

எங்களிற்கு தேசிய மாற்றம் அல்லது புதிய ஆரம்பம் தேவை எங்களிற்கு சுதந்திரம் கிடைத்து 74 வருடங்களாகின்றன - இலங்கை பொருளாதார செழிப்பு நிலையை நோக்கி தெரிவு செய்த பாதை சரியானதா என்ற கேள்விக்கு பதிலளிக்கவேண்டியுள்ளது என கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

இன்றைய முற்றிலும் நம்பிக்கையற்ற நிலைக்கு இந்தனை வருடங்களாக அரசியல்வாதிகள் தெரிவு செய்த தவறான முடிவுகள் மாத்திரம் காரணமில்லை,மக்களும் உள்நோக்கம் கொண்ட அரசியல் கலாச்சார நோக்கங்களிற்கு தங்களை பயன்படுத்தி கொள்ள அனுமதித்தவர்களும் இதற்கு காரணம்.எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 74 வருடங்களாக எங்கள் நாடு பிற்போக்கு நிலைக்கு சென்றுள்ளது- ஆசியாவில் உள்ள குறைந்தளவு அதிஸ்டம் உள்ள நாடுகள் முன்னோக்கி நகர்ந்துள்ள அதேவேளை எங்கள் பயணம் சிறந்ததிலிருந்து மோசமானதை நோக்கி நகர்ந்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாடு பாரதூரமான தார்மீக பொருளாதார, சமூக, அரசியல் நெருக்கடியில் சிக்குண்டுள்ளது, சுதந்திரத்திற்குப் பின்னர் ஒரு புதிய தேசம் குறித்த குறுகிய மனப்பான்மையே இதற்குக் காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்தத் தவறுகள் தொலைநோக்கின்மை காரணமாக எங்கள் பொருளாதாரம் சிதைத்துபோயுள்ளது, சமூகங்கள் மத, மொழி வேறுபாடுகளால் பிரிக்கப்பட்டு ஒருவரையொருவர் சந்தேகிக்கும் நிலையில் உள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.