பயணம் செய்யும் இடங்கள் குறித்து முகநூலில் பகிர வேண்டாம் : சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்

Prathees
2 years ago
பயணம் செய்யும் இடங்கள் குறித்து முகநூலில் பகிர வேண்டாம் : சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்

வரவிருக்கும் பண்டிகை காலத்தில் பயணம் செய்வது பற்றி  பேஸ்புக் அல்லது சமூக ஊடகங்களில் தகவல்களை வெளியிடுவதைத் தவிர்க்குமாறும் இவ்வாறான தகவல்களை பகிர்வதால்  மோசடி செய்பவர்கள் வீடுகளுக்குள் புகுந்து கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடலாம் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

மேலும்இ முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் நகரங்களுக்கோ அல்லது வேறு இடங்களுக்கோ பயணிக்கும் போது, ​​பாதுகாப்பான இடங்களில் மாத்திரம் நிறுத்த வேண்டும்.

சம்பந்தப்பட்ட இடங்களில் வாகனங்களை நிறுத்தும்போது பாதுகாப்பு வழிமுறைகளைப் பயன்படுத்துமாறும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளை திருட முடியும் என்பதால், பொதுமக்கள் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை பயன்படுத்துமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.

பயணம் குறித்த தகவலையோ, பயணத்தின் தொடர்புடைய இடங்களையோ முகநூல் அல்லது சமூக வலைதளங்களில் பதிவிடுவதன் மூலம், சமூக வலைதளங்களிலும், முகநூல்களிலும் நண்பர்களாக நடிக்கும் கடத்தல்காரர்கள் தங்கள் கொள்ளைச் செயல்களை மேற்கொள்வது எளிதாக இருக்கும். சமூக ஊடக வலைப்பின்னல்களில் தகவல்களைச் சேர்ப்பதைத் தவிர்க்குமாறும்  அவர் கேட்டுக் கொண்டார்.