கஜமுத்து சம்பவத்தில் கைது செய்யப்பட்ட முன்னாள் பிரதி அமைச்சரிடம் மீண்டும் விசாரணை

Prathees
2 years ago
கஜமுத்து சம்பவத்தில் கைது செய்யப்பட்ட முன்னாள் பிரதி அமைச்சரிடம் மீண்டும் விசாரணை

அரசாங்கத்திற்கு சொந்தமான கைத்துப்பாக்கியை மீள ஒப்படைக்காமை தொடர்பில் முன்னாள் பிரதி அமைச்சர் பண்டு பண்டாரநாயக்கவிற்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

பண்டு பண்டாரநாயக்க பிரதி அமைச்சராக இருந்த காலத்தில் அரசாங்கத்தினால் கைத்துப்பாக்கி அவருக்கு வழங்கப்பட்டதாகவும் அது இதுவரை கையளிக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எந்தவொரு புதுப்பிப்பு கோரிக்கையும் இன்றி துப்பாக்கி உரிமம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

கஜமுத்து சம்பவத்திற்கு மேலதிகமாக இந்த துப்பாக்கி தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்  அவர் மேலும் தெரிவித்தார்.

முன்னாள் பிரதி அமைச்சர் பாண்டு பண்டாரநாயக்க உள்ளிட்ட 5 பேர் கடந்த 25ஆம் திகதி மூன்று முத்துக்களை 30 மில்லியனுக்கு விற்பனை செய்வதற்காக ஜீப்பில் அம்பாறை நோக்கி பயணித்த போது விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டனர். சந்தேக நபர்களில் ஒரு பெண்ணும் அடங்குவார்.

 அவர்கள் ஏப்ரல் 7ம்  திகதி வரை காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி, 8 தோட்டாக்கள் மற்றும் அடையாளம் தெரியாத 5 பாறைத் துண்டுகளையும் விசேட அதிரடிப்படை கைப்பற்றியுள்ளது.