வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பி யாழில் கஞ்சா செடி வளர்த்த நபர் கைது!

#Jaffna
Prasu
2 years ago
வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பி யாழில் கஞ்சா செடி வளர்த்த நபர்  கைது!

வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பியவர் வீட்டில் கஞ்சா செடி வளர்த்த குற்றத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரித்தானியாவில் இருந்து நாடு திரும்பி , யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் வசித்து வந்த நபரே கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் தனது வீட்டில் பூஞ்சாடியில் கஞ்சா செடி வளர்ப்பதாக கோப்பாய் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் , குறித்த நபரின் வீட்டினை நேற்று (செவ்வாய்க்கிழமை) சுற்றிவளைத்த பொலிஸார் , அவரை கைது செய்ததுடன், வீட்டில் வளர்த்த கஞ்சா செடியினை சான்று பொருளாக மீட்டுள்ளனர்.