பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் வேகமாக பரவிவரும் காட்டுத்தீ - 03 இலட்சம் மக்கள் வெளியேற்றம்
பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் காட்டுத்தீ வேகமாக பரவி வருகின்றது. நாட்டில் நிலவும் வெப்பநிலை தீயணைப்பு பணிகள் சவாலாக உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் காட்டுத்தீ காரணமாக சுமார் 03 இலட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து ஸ்பெயினில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் மாட்ரிட் புறநகரப் பகுதிகளில் வானிலை சற்று மாறியதால் தீயணைப்பு வீரர்களுக்கு ஓரளவு நிவாரணம் கிடைத்துள்ளது.
இருப்பினும், "முன்னால் இன்னும் கடினமான நாட்கள் உள்ளன" என்று பிரதமர் பெட்ரோ சான்செஸ் (Pedro Sánchez ) தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், வலென்சியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயில் 70 வயதிற்கு மேற்பட்டதாக நம்பப்படும் ஒருவர் தனது காருக்குள் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த அவசரநிலையை சமாளிக்க பிரான்ஸ் அரசு இராணுவத்தையும் களமிறக்கியுள்ளது. தீ பரவாமல் தடுக்கும் வகையில் புதர்களை அகற்றுதல் மற்றும் தீ தடுப்பு பாதைகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகளில் இராணுவம் ஈடுபட்டுள்ளது.
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன், பாதிக்கப்பட்ட பகுதிகள் மீண்டும் கட்டியெழுப்பப்படும் என்றும், தேவையான காலம் முழுவதும் அரசு மக்களுடன் இருக்கும் என்றும் உறுதியளித்துள்ளார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே