IPL Match 07 - 6 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

#IPL #T20
Prasu
4 years ago
IPL Match 07 -  6 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 7வது லீக் ஆட்டம், மும்பை பிராபோர்ன் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், லக்கோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் விளையாடின.

டாஸ் வென்ற  லக்னோ அணி கேப்டன் கே.எல்.ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார்.இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் குவித்தது.

அந்த அணியின்  துவக்க வீரர் ராபின் உத்தப்பா அதிபட்சமாக 50 ரன்கள் அடித்தார். ஷிவம் துபே 49 ரன்களும், மொயீன் அலி 35  ரன்களும் எடுத்தனர்.

211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி பின்னர் விளையாடிய லக்னோ அணி 19.3  ஓவர்கள் முடிவில்  4 விக்கெட் இழப்பிற்கு  211 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.  

அந்த அணி வீரர்  துவக்க வீரர் குயின்டன் டி காக் 61 ரன்கள் குவித்தார். கேப்டன் கே.எல்.ராகுல் 40 ரன்கள் அடித்தார். மணிஷ் பாண்டே 5 ரன்னுக்கும், தீபக் ஹூடா 13 ரன்களுக்கும் ஆட்டமிழந்த நிலையில், எவின் லூயிஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 

23 பந்துகளில் 55 ரன்கள் குவித்த அவர் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருக்கு துணையாக களத்தில் இருந்த ஆயுஷ் படோனி 19 ரன்கள் அடித்தார். 

இதையடுத்து லக்னோ அணி 19.3 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்து 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4