ஸ்தம்பிக்கும் அபாயத்தில் அரச வைத்தியசாலைகள்!
Mayoorikka
2 years ago
அரசாங்க வைத்தியசாலைகளில் காணப்படும் மருந்துப் பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக சுமார் இரண்டு வாரங்களுக்கு போதுமான மருந்துகளே அந்த வைத்தியசாலைகளில் இருப்பதாக அரசாங்க மருந்தாளர் சங்கத்தின் தலைவர் அஜித் திலகரத்ன தெரிவித்தார்.
எதிர்வரும் இரண்டு வாரங்களில் டொலர் நெருக்கடிக்கு தீர்வு காணப்படாவிடின், அரசாங்க வைத்தியசாலைகளுக்கு தேவையான மருந்துப் பொருட்களை விநியோகிக்க முடியாமல், அரச வைத்தியசாலைகளின் மருந்து விநியோகம் நிறுத்தப்படும் அபாயம் ஏற்படும் எனவும் திலகரத்ன தெரிவித்தார்.
அத்துடன் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் அனைத்து மருந்துகளையும் வெளியில் இருந்து வாங்க வேண்டிய நிலை உருவாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.