தென்னிலங்கை அரசியலில் திடீர் மாற்றம் - இராஜினாமா கடிதத்தை ஒப்படைத்த மஹிந்த?

Nila
2 years ago
தென்னிலங்கை அரசியலில்  திடீர் மாற்றம் - இராஜினாமா கடிதத்தை ஒப்படைத்த மஹிந்த?

பிரதமர் பதவியிலிருந்து விலகுவதற்காக மஹிந்த ராஜபக்ஷ சற்று முன்னர் இராஜினாமா கடிதத்தை ஒப்படைத்துள்ளார் என பிரதமர் அலுவலக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
ஜனாதிபதியும் பிரதமரும் அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு தீர்மானித்துள்ள நிலையிலேயே பிரதமர் பதவி விலகல் கடிதத்தை ஒப்படைத்துள்ளார்.
 
எப்படியிருப்பினும் இந்த கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்க மறுத்துள்ளார் என செய்தி வெளியாகியுள்ளது.
 
இதேவேளை ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன பிரதமராக நியமிக்கப்படவுள்ளார்.
 
மேலும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவும் பதவி விலகவுள்ள நிலையில் புதிய நிதியமைச்சராக ஹர்சா டி சில்வா நியமிக்கப்படவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
 
பெரும்பான்மை சிங்கள மக்களின் வாக்குகளில் ஆட்சியை கைப்பற்றிய ராஜபக்ஷ சகோதரர்கள் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினால் பல சிக்கல்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.
 
சிங்கள மக்களே கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளமையினால் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகியுள்ளார். 
 
அடுத்து வரும் நாட்களில் காபந்து அரசாங்கம் ஒன்று உருவாகும் என அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளார்.