உக்ரைன் மரியுபோல் தாக்குதல்- லிதுவேனிய திரைப்பட இயக்குனர் கொலை

#Ukraine #Russia #War
Prasu
2 years ago
உக்ரைன் மரியுபோல் தாக்குதல்- லிதுவேனிய திரைப்பட இயக்குனர் கொலை

உக்ரைனில் ரஷிய ராணுவத்தால் முற்றுகையிடப்பட்டுள்ள மரியுபோல் நகரில், லிதுவேனியாவைச் சேர்ந்த பிரபல திரைப்பட இயக்குனர் மேன்டஸ் கிவேதரவிசியஸ் கொல்லப்பட்டுள்ளார். இத்தகவலை லிதுவேனிய அதிபர் கிடானஸ் நவுசேதா தெரிவித்துள்ளார். உக்ரைனில் பணிபுரிந்த ஒரு படைப்பாளியை நாடு இழந்திருப்பதாகவும், அவர் ரஷியாவால் தாக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

45 வயதான மேன்ஸ், ஆவணப்படம் தயாரிப்பதற்காக உக்ரைனில் பணியாற்றி வந்த நிலையில், அவர் கொல்லப்பட்டது, திரைப்பட கலைஞர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

மேன்டஸ் மறைவு, லிதுவேனிய திரைப்பட சமூகத்திற்கும் முழு உலகிற்கும் பேரிழப்பு என்றும், எங்கள் இதயங்கள் உடைந்துவிட்டன என்றும் லிதுவேனிய ஆவணப்பட இயக்குநரும் தயாரிப்பாளருமான கீட்ரே ஜிக்கைட் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

செசன்யா மற்றும் உக்ரைனில் ராணுவ மோதல்கள் குறித்த ஆவணப்படங்கள் மூலம் பிரபலமானவர் மேன்டஸ் கிவேதரவிசியஸ். 2016 பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் அவரது "மரியுபோல்" திரைப்படம் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.