மக்கள் அதிகாரத்தை வேறொரு கட்சி அபகரிப்பதை அனுமதிக்க முடியாது - பாராளுமன்றத்திற்கு வெளியே மக்கள் அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும்

Prathees
2 years ago
மக்கள் அதிகாரத்தை வேறொரு கட்சி அபகரிப்பதை அனுமதிக்க முடியாது - பாராளுமன்றத்திற்கு வெளியே மக்கள் அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும்

அரசாங்கத்திற்கு எதிராக கட்டியெழுப்பப்பட்டுள்ள மக்கள் சக்தியை வேறு எந்தக் கட்சி அல்லது குழுவும் சூறையாடுவதற்கு இடமளிக்கக் கூடாது என முன்னிலை சோசலிசக் கட்சியின் செயலாளர் குமார் குணரட்ணம் நேற்று (4ம் திகதி) தெரிவித்தார்.

பாராளுமன்றத்திற்கு வெளியில் 'மக்கள் அரசாங்கத்தை' அமைப்பதற்கு மக்கள் ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் அணிதிரள வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

மக்கள் தமது பிரச்சினைகளை முன்வைக்கும் வகையில் கிராம மட்டங்களில் ‘ஜனசபை’ அமைக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

மக்கள் அதிகாரத்தை சூறையாடி வேறு ஒரு தலைவருக்கு மீண்டும் ஆட்சியை வழங்கவே சில கட்சிகள் இடைக்கால அரசு தீர்மானங்களை கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.

தேர்தலை அறிவித்துவிட்டு கையை துடைக்காமல் மக்கள் அதிகாரத்தை மக்கள் கையில் வைத்திருக்க வேண்டும் என குமார குணரட்னம் தெரிவித்தார்.

நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடிக்கு தீர்வு காண குறுகிய கால மற்றும் நீண்ட கால தீர்வுகள் காணப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.