அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 06.04.2022

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
2 years ago
அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 06.04.2022

மேஷம்
அசுவினி : குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னையை எளிதாக சமாளிப்பீர்கள்.
பரணி : உங்களின் நிதானப்போக்கால் நன்மை கிடைக்கும். மனத்தெளிவு ஏற்படும்.
கார்த்திகை 1 : பங்குச் சந்தை லாபம் தரும். கலைகளில் ஆர்வம் வளரும்.

ரிஷபம்
கார்த்திகை 2,3,4 : செயல்களில் இது வரை இருந்த தாமதங்கள் அகலும்.
ரோகிணி : பழைய நண்பர்களின் சந்திப்பு உண்டு. மகிழ்ச்சிகரமான நாள்.
மிருகசீரிடம் 1,2 : வீடு, நிலம் வாங்கும் யோகம் உண்டு. நட்பு வட்டம் விரியும்.

மிதுனம்
மிருகசீரிடம் 3,4 : சுபநிகழ்ச்சிக்கு தேவையான பணம் கிடைக்கும்.
திருவாதிரை : அதிர்ஷ்டம் வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்.
புனர்பூசம் 1,2,3 : பணியாளர்களுக்கு ஊதிய உயர்வும், சலுகைகளும் கிடைக்கலாம்.

கடகம்
புனர்பூசம் 4 : எதிர்பாராத நன்மையை காண்பீர்கள். நிம்மதியான நாள்
பூசம் : உயரதிகாரிகளின் நெருக்கத்தின் மூலம் நன்மை காண்பீர்கள்.
ஆயில்யம் : உங்களின் பணத்தேவை ஒன்று இன்றைக்கு நிறைவேறும்

சிம்மம்
மகம்: நிதிநிலை சிறப்பாக இருக்கும். புதிய விஷயம் ஒன்றை கற்பீர்கள்.
பூரம்: புதிய முயற்சியில் வெற்றி கிடைக்கும். மகிழ்ச்சியான நாள்.
உத்திரம் 1: குடும்பத்தினர் இடையே அன்பும், ஆதரவும் பெருகும்.

கன்னி
உத்திரம் 2,3,4 : குடும்பத்தில் ஒருவருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு வரும்.
அஸ்தம் : பணிபுரியும் பெண்களுக்கு யோகமான நாள். பொறுமை கூடும்.
சித்திரை 1,2 : நிதானப்போக்கு மாறி உங்கள் செயலில் வேகம் கூடும்.

துலாம்
சித்திரை 3,4: முன்னேற்றப்பாதையில் சில இடையூறு வந்தாலும் நீங்கும்.
சுவாதி : பணியாளர்கள் பேச்சு, செயலில் கவனத்துடன் இருப்பது நல்லது.
விசாகம் 1,2,3: வேலையில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

விருச்சிகம்
விசாகம் 4 : உங்களின் முயற்சிக்கேற்ற பலன் நன்கு கிடைக்கும்.
அனுஷம்: சமீபத்தில் ஏற்பட்ட கடன் தொல்லை நீங்கும்.
கேட்டை: மனதில் மகிழ்ச்சி கூடும். நல்லோர் ஆதரவு கிடைக்கும்.

தனுசு
மூலம்: உறவினருடன் ஏற்பட்ட பிரச்னைகளை இதமாகப் பேசி தீர்ப்பீர்கள்.
பூராடம்: உங்கள் மீதுள்ள மேலதிகாரிகளின் கோபம் தணிய ஆரம்பிக்கும்.
உத்திராடம் 1: சகோதர சகோதரிகளின் ஆதரவு மெல்ல அதிகரிக்கும்.

மகரம்
உத்திராடம் 2,3,4: சகோதரர்களின் ஒத்துழைப்பால் முன்னேற்றம் காண்பீர்கள்.
திருவோணம் : நவீன கருவிகளை உபயோகிப்பீர்கள். கற்பனை பயம் வரும்.
அவிட்டம் 1,2 : சிறு சிறு கடன் தொல்லை இருந்தாலும் பாதிப்பு இருக்காது

கும்பம்:
அவிட்டம் 3,4 : பிரிந்த நண்பர்களைச் சேர்த்து வைக்கும் முயற்சி பலன் தரும்.
சதயம் : தன்னம்பிக்கையை அதிகரித்துக் கொள்ள வேண்டிய நாள்.
பூரட்டாதி 1,2,3: விலகிச் சென்ற உறவினர்கள் உங்களைப் புரிந்து கொள்வர்.

மீனம்
பூரட்டாதி 4 : வழக்கமான பணிகளில் ஏற்பட்ட சுணக்கங்கள் நீங்கும்.
உத்திரட்டாதி : அக்கம்பக்கத்தினரிடம் இருந்த கொடுக்கல், வாங்கல் பிரச்னை அகலும்.
ரேவதி : பெற்றோர்களின் முயற்சி வெற்றி பெற ஆரம்பிக்கும்.