அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 07.04.2022

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
2 years ago
அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 07.04.2022

மேஷம்
அசுவினி : தந்தை வழி உறவினர் இடையே இருந்த மனவருத்தம் நீங்கும்.
பரணி : நண்பர், உறவினர் இடையே நெருக்கம் கூடும். உற்சாகமான நாள்.
கார்த்திகை 1 : புதியவர்களை நம்பி புதிய பொறுப்பை ஒப்படைக்க வேண்டாம்.

ரிஷபம்
கார்த்திகை 2,3,4 : நீங்கள் முயன்ற விஷயங்கள் விரைவாக நடைபெறும்.
ரோகிணி : சிலருக்கு பணியில் ஏமாற்றம் வந்து உடனே சரியாகும்.
மிருகசீரிடம் 1,2 : குடும்ப முன்னேற்றம் ஏற்படும். பயம் நீங்கும்

மிதுனம்
மிருகசீரிடம் 3,4 : பணியாளர்கள் சிலருக்கு இடமாற்றம் வரலாம்
திருவாதிரை : திருப்தி அளிக்காத செயலில் ஈடுபட வேண்டாம். பொறுமை தேவை.
புனர்பூசம் 1,2,3 : கொடுக்கல், வாங்கலில் உள்ள மந்த நிலை நீங்கும்.

கடகம்
புனர்பூசம் 4 : குழந்தைகளால் பெருமிதம் ஏற்படும். கவர்ச்சி அம்சம் கூடும்.
பூசம் : பணியிடப் பிரச்னை அகலும். சலிப்பு நீங்கி நிம்மதி வரும்.
ஆயில்யம் : குடும்ப உறவுகளில் முன்னேற்றம் ஏற்படும். யோகம் கூடும்.

சிம்மம்
மகம் : இதுவரை தடையாக இருந்த செயல்கள் விரைவாக நடைபெறும்.
பூரம் : சமீபத்தில் குழந்தைகளால் ஏற்பட்ட மனஅழுத்தம் அகலும்.
உத்திரம் 1 : எதிர்பாராத நல்ல விஷயம் ஒன்று நடைபெறும்.

கன்னி
உத்திரம் 2,3,4: குடும்பத்தினருக்கு புதிய ஆடை, நகை வாங்கி கொடுத்து மகிழ்வீர்கள்.
அஸ்தம் : பணி சம்பந்தமாக வெளிநாட்டில் இருந்து அழைப்பு வரலாம்.
சித்திரை 1,2: பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். கலகலப்பான நாள்

துலாம்
சித்திரை 3,4 : எதிர்பாலினத்தினரால் ஏற்பட்ட பிரச்னை ஒன்று தீரும்.
சுவாதி : திட்டமிட்ட செயல்களை நன்கு செய்து முடிப்பீர்கள்.
விசாகம் 1,2,3: குடும்பத்தினருடன் அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள்

விருச்சிகம்
விசாகம் 4 : நாளின் முற்பாதியில் செலவும், பிற்பாதியில் நிதிநிலையும் உயரும்
அனுஷம் : பிறருடன் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டி நாள். செலவு குறையும்.
கேட்டை : அரசு வகையில் எதிர்பார்த்த ஆதாயம் உண்டு. மந்தமான நாள்.

தனுசு
மூலம் : குழந்தைகளால் ஏற்பட்ட பிரச்னை அவர்களாலேயே தீரும்.
பூராடம்: பாராட்டு கிடைக்கும். பெற்றோரின் ஆதரவு கிடைக்கும்.
உத்திராடம் 1 : பணியாளர் சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் வரலாம்

மகரம்
உத்திராடம் 2,3,4 : வாகனம் வாங்கும் முயற்சி உங்களின் விருப்பப்படி நிறைவேறும்
திருவோணம் : எதிர்பார்த்த செய்தி வரும். நிம்மதி அதிகரிக்கும்.
அவிட்டம் 1,2 : தாய், சகோதரர்களுக்கு உங்களால் நன்மை ஏற்படும்

கும்பம்
அவிட்டம் 3,4 : குடும்பத்தினருக்கு உங்களால் சிறு சிறு நன்மைகள் ஏற்படும்.
சதயம் : புதிய முயற்சிகளின் மூலம் லாபம் கிடைக்கும். கவலைகள் நீங்கும்.
பூரட்டாதி 1,2,3 : எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்வது நல்லது.

மீனம்
பூரட்டாதி 4 : உங்களது குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்குவர்.
உத்திரட்டாதி : வரவு திருப்திகரமாக இருக்கும். சுபச்செலவுகள் ஏற்படும்.
ரேவதி: தொட்டது துலங்கும் நாள். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும்.