சமூக ஊடகங்கள் மூலம் மக்களை தூண்டிவிட முயன்றவர் கைது

Prathees
2 years ago
சமூக ஊடகங்கள் மூலம் மக்களை தூண்டிவிட முயன்றவர் கைது

சமூக ஊடகங்களில் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பதிவிட்ட ஒருவரை நாகொட பொலிஸார் திங்கட்கிழமை (06) கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் போவிட்டியமுல்ல தலாவ பகுதியைச் சேர்ந்த 36 வயதுடையவராவார்.

 பொலிஸ் மற்றும் இராணுவத்தினரையும் அவர்களது குடும்பத்தினரையும் கொல்ல வேண்டும் என சந்தேக நபர் சமூக ஊடகங்களில் வெறுப்புணர்வை பதிவிட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் மனைவியை பிரிந்து சென்றவர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நாகொட பொலிஸ் பொறுப்பதிகாரி தம்மிக்க டயஸ் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டு, உடுகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.