நான் இலங்கையை விட்டு வெளியேற மாட்டேன்! அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் பதிலளிப்பேன்: கப்ரால்

Prathees
2 years ago
நான் இலங்கையை விட்டு வெளியேற மாட்டேன்! அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் பதிலளிப்பேன்: கப்ரால்

இந்த வார தொடக்கத்தில் தனது பதவியை இராஜினாமா செய்த மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால், தான் இலங்கையை விட்டு வெளியேறப் போவதில்லை என்றும், அதற்குப் பதிலாக பல்வேறு தரப்பினரால் தம்மீது சுமத்தப்படும் அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் பதிலளிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.

ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த உடனேயே கப்ரால் நாட்டை விட்டு வெளியேறிவிட்டார் என்ற வதந்திகளைத் தொடர்ந்து, கப்ரால் இதனைத் தெரிவித்துள்ளார்.

"இந்த நாட்டில் உள்ள அனைவருக்கும் தெரியும், நான் எப்போதும் தீங்கிழைக்கும் மற்றும் வெறுக்கத்தக்க குற்றச்சாட்டுகளை அமைதியாக கையாண்டேன்.

  கண்ணியமான மற்றும் தொழில்முறை முறையில், இந்த நிகழ்விலும் நான் அதை செய்வேன்இ" என்று கப்ரால் கூறினார்.

ஏப்ரல் 18ஆம் திகதி வரை கப்ரால் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுத்து கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இந்த வாரம் உத்தரவு பிறப்பித்தது.

முன்னாள் மத்திய வங்கி ஆளுநரை ஏப்ரல் 18ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு மேலதிக நீதவான் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.