வர்த்தமானி மூலம் சந்தையை கட்டுப்படுத்த முடியாது என மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்

#SriLanka #Central Bank #Head
வர்த்தமானி மூலம் சந்தையை கட்டுப்படுத்த முடியாது என மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்

விதிகள் அல்லது ஒழுங்குமுறைகளை விதித்து சந்தையை கட்டுப்படுத்த முடியாது என மத்திய வங்கியின் புதிய ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். விலையை கட்டுப்படுத்தும் வகையில் பாரியளவிலான வர்த்தமானி அறிவித்தல்களை வெளியிட்ட போதிலும் எவ்வித பலனும் இல்லை என்பது தெளிவாகின்றது என மத்திய வங்கியின் ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“பொருளாதார நெருக்கடியின் அவசர நிலை” என்ற தலைப்பில் இலங்கை ஒலிபரப்பாளர் மன்றம் ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மத்திய வங்கியின் ஆளுநர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவாதம் பல தொலைக்காட்சி மற்றும் வானொலி சேனல்களில் ஒளிபரப்பப்பட்டது. சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எப்) நிதி பெறும் வரை குறுகிய கால நடவடிக்கைகள் என்ன என்று பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். மத்திய வங்கியின் ஆளுநர் பின்வருமாறு பதிலளித்தார்.
இக்கலந்துரையாடலில் நிதியமைச்சின் புதிய செயலாளர் கே.எம்.எம்.மகிந்த சிறிவர்தனவும் கலந்துகொண்டார். சர்வதேச நாணய நிதியத்துடன் இடம்பெற்று வரும் கலந்துரையாடல்கள் தொடர்பில் அவர் கருத்து வெளியிட்டார்

நிதியமைச்சின் செயலாளர் தற்போதைய நெருக்கடியில் செய்ய வேண்டிய மற்றும் செய்யக்கூடாத சிலவற்றைப் பற்றியும் பேசினார்.

இந்த கலந்துரையாடலில் இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் பிரதித் தலைவர் துமிந்த ஹுலங்கமுவவும் கலந்துகொண்டார். சர்வதேச நாணய நிதியத்தை கையாள்வதில் சாத்தியமான முன்னேற்றங்கள் குறித்து அவர் கருத்து தெரிவித்தார்.

இலங்கை அபிவிருத்தி மற்றும் நிர்வாக நிறுவகத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் எம்.திலகசிறியும் உரையாற்றினார்.