தேயிலை கொள்வனவு: ரஷ்யாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய கோரிக்கை

Mayoorikka
2 years ago
தேயிலை கொள்வனவு: ரஷ்யாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய கோரிக்கை

சிலோன் டீ எனப்படும் இலங்கை தேயிலை உற்பத்தியை அதிகளவில் கொள்வனவு செய்யும் ரஷ்யாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்துமாறு தேயிலை ஏற்றுமதியாளர்கள் சங்கம், இலங்கை தேயிலை சபையிடம் கோரியுள்ளது.

யுக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை அடுத்து உருவாகியுள்ள சர்வதேச தடைகளால் ரஷ்ய சந்தையில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளமையால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனினும் சீனா மற்றும் வியட்நாம் போன்ற நாடுகள் தடையின்றி ரஷ்யாவுக்கு தேயிலை ஏற்றுமதியில் ஈடுபடுகின்றன.

அத்துடன் இந்தியாவும் ரஷ்யாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கைச்சாத்திட்டுள்ளதாக தேயிலை ஏற்றுமதியாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தநிலையில் ரஷ்யாவில் இலங்கை தேயிலை சந்தையை பாதுகாப்பதற்கு புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட வேண்டும் என தேயிலை ஏற்றுமதியாளர்கள் கோரியுள்ளனர்.

இலங்கையில் இருந்து ரஷ்யாவுக்கு வருடாந்தம் 28 முதல் 30 மில்லியன் கிலோகிராம் தேயிலை ஏற்றுமதி செய்யப்படுகிறது.

அத்துடன் யுக்ரைனுக்கு சுமார் 4 மில்லியன் கிலோகிராம் தேயிலை ஏற்றுமதி செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.