புதிதாகப் பிறந்த குழந்தைகளின் காற்றோட்டத்திற்கான குழாய்கள் இல்லை: இக்கட்டான நிலையில் மருத்துவர்கள்

Prathees
2 years ago
புதிதாகப் பிறந்த குழந்தைகளின் காற்றோட்டத்திற்கான குழாய்கள் இல்லை: இக்கட்டான நிலையில் மருத்துவர்கள்

புதிதாகப் பிறந்த குழந்தைகள், கைக்குழந்தைகள் மற்றும் குழந்தைகளின் காற்றோட்டத்திற்கான எண்டோட்ராஷியல் (ETT) குழாய்கள் இல்லாததால், நாட்டில் உள்ள அனைத்து குழந்தை மருத்துவர்கள் மற்றும் நியோனாட்டாலஜிஸ்ட்களும் இக்கட்டான நிலையில் உள்ளனர்.

காஸில் ஸ்ட்ரீட் போதனா மருத்துவமனை ஆலோசகர் டொக்டர் எல்.பி.சி. சமன் குமார தெரிவித்தார்.

மிக விரைவில் அனைத்து மருத்துவமனைகளிலும் ETT களின் இருப்புக்கள் தீர்ந்துவிடும் என்றும், புதிதாகப் பிறந்த குழந்தைகளை காற்றோட்டம் செய்வதற்கு எண்டோட்ராஷியல் குழாய்களை மீண்டும் பயன்படுத்தும் நிலைமைக்கு மருத்துவமனைகள் வந்துள்ளனஇ இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர் கூறினார்.

நாட்டில் நிலவும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி காரணமாக, மருத்துவமனை வலையமைப்பில் மருத்துவப் பொருட்கள் தீர்ந்துவிட்டதாக டொக்டர் எல்.பி.சி. சமன் குமார தெரிவித்துள்ளார்.

எனவே, மருத்துவமனை மருத்துவர்கள் நாட்டில் மீண்டும் பயன்படுத்தக்கூடிய வென்டிலேட்டர் சர்க்யூட்களைப் பயன்படுத்துவதற்கான விதிமுறைகளை மாற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டடுள்ளார்.