கடும் மழையுடனான காலநிலை காரணத்தால் மண்சரிவு அபாய எச்சரிக்கை

Prabha Praneetha
2 years ago
கடும் மழையுடனான காலநிலை காரணத்தால் மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டில் தற்போது நிலவும் கடும் மழையுடனான காலநிலையை அடுத்து எட்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

அதன்படி, குருநாகல், மாத்தளை, நுவரெலியா, கண்டி, கேகாலை, களுத்துறை, பதுளை, கொழும்பு ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குருநாகல் மாவட்டத்தின் அலவ்வ, மாவத்தகம, நாரம்மல, பொல்கஹவெல மற்றும் ரிதீகம ஆகிய பிரதேசங்களுக்கும் மாத்தளை மாவட்டத்தில் லக்கல, பல்லேகம, மாத்தளை, ரத்தோட்ட மற்றும் உக்குவெல ஆகிய பகுதிகளுக்கும் நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ, கொத்மலை மற்றும் வலப்பனை ஆகிய இடங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், கண்டி, புலத்கொஹுபிட்டிய, தெஹியோவிட்ட, தெரணியகல, ருவன்வெல்ல, வரகாபொல ஆகிய இடங்களுக்கும் கேகாலையில் யட்டியந்தோட்டையில் உள்ள கங்கா இஹல கோரலே, கங்காவட கோரளை மற்றும் உடதும்பர ஆகிய இடங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு களுத்துறை மாவட்டத்தில் அகலவத்தை, புலத்சிங்கள, தொடங்கொட, இங்கிரிய, மத்துகம, பாலிந்தநுவர மற்றும் வலல்லாவிட்ட ஆகிய பகுதிகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் பதுளை மாவட்டத்தில் பதுளை, பண்டாரவளை, எல்ல, ஹல்துமுல்ல, ஹாலி எல மற்றும் வெலிமடை ஆகிய இடங்களுக்கும் கொழும்பு மாவட்டத்தில் பாதுக்க மற்றும் சீதாவக்க ஆகிய இடங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.