எதிர்ப்புக்கான காரணங்களைத் தேடாமல் ஆட்சியாளர்கள் அதிகாரத்தைத் தழுவுகிறார்கள்: பழங்குடியின தலைவர்

Prathees
2 years ago
எதிர்ப்புக்கான காரணங்களைத் தேடாமல் ஆட்சியாளர்கள் அதிகாரத்தைத் தழுவுகிறார்கள்: பழங்குடியின தலைவர்

மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தியமைக்கான காரணத்தை நிவர்த்தி செய்வதற்குப் பதிலாக ஆட்சியாளர்கள் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள முயற்சித்து வருவதாக பழங்குடியின தலைவர் உருவரிகே வன்னிலத்தோ தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தற்போதுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக கடந்த சில நாட்களாக பாராளுமன்றம் கூடிய போது என்ன நடந்தது?

அவர்கள் தங்கள் தலைவரைப் பாதுகாப்பதற்கும் தங்கள் சொந்த அதிகாரத்தைப் பாதுகாப்பதற்கும் மட்டுமே பேசுகிறார்கள்.

அரசாங்கத்தையும் சட்டத்தையும் மதிக்கும் மக்கள் வாழ்க்கையில் கடுமையான பிரச்சனைகளை எதிர்கொண்டதால் வீதிக்கு இறங்கினர்.

அதாவது, தலைவர்களும், ஆட்சியாளர்களும் இந்தக் கட்டத்தில் கவனமாக இருக்க வேண்டும், ஆனால் அப்படிச் செய்வதாகத் தெரியவில்லை.

தற்போதைய ஆட்சியை மாற்ற வேண்டிய தேவையிருப்பினும், இன்று மக்கள் எதிர்நோக்கும் எண்ணெய், எரிவாயு, மின்சாரப் பற்றாக்குறை போன்ற பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியமானது என அவர் மேலும் தெரிவித்தார்.