சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்லும் மூவருக்கும் பாராளுமன்ற அதிகாரத்தை வழங்குவோம்: ரணில்

Prathees
2 years ago
சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்லும் மூவருக்கும் பாராளுமன்ற அதிகாரத்தை வழங்குவோம்: ரணில்

பாராளுமன்றத்திற்கு முழு நிதி அதிகாரம் உள்ளதால், சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல்களுக்கு தேவையான அதிகாரங்கள் மற்றும் அங்கீகாரத்தை மூன்று பிரதிநிதிகளுக்கும் வழங்குவதற்காக நாளை (11ம் திகதி) பாராளுமன்றம் கூடவுள்ளது.

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று (08) பாராளுமன்றத்தில் இதனைத் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் கலந்துரையாடல்களுக்கு ஆதரவளிப்பதற்கும் தேவையான அறிவுறுத்தல்களை வழங்குவதற்கும் எதிர்வரும் 11 ஆம் திகதி பாராளுமன்றம் கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான  பேச்சுவார்த்தை முக்கியமானது என்றும், உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி  ஆகியவற்றிடம் இருந்து கூடுதல் கடன்களை பெறுவதற்கு நாடு தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

பாராளுமன்றத்தின் அதிகாரங்களை எடுத்துக் கொண்டு தேவையான முடிவுகளை எடுப்போம். அமைச்சரவையை நியமித்தால், நிதிக் குழுவின் அதிகாரங்களை அதிகரித்து பாராளுமன்றத்திற்கு வந்து முடிவெடுப்பதற்கு உதவுவோம் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.