இன்றும் நாளையும் 4 மணிநேர மின்வெட்டு- இலங்கை மின்சார சபை

Prabha Praneetha
2 years ago
இன்றும் நாளையும் 4 மணிநேர மின்வெட்டு- இலங்கை மின்சார சபை

இன்றும் நாளையும் 4 மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இதற்கான அனுமதியை வழங்கியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, காலை 8.30 மணி முதல் இரவு 10.45 மணி வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

ABCD வலயங்களுக்கு காலை 8.30 மணி முதல் 10.45 மணி வரையும், மாலை 5.30 மணி முதல் 7.15 மணி வரையும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்

இருப்பினும் DEF வலயங்களுக்கு இன்று காலை 10.45 முதல் மதியம் 1 மணி வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

GHI வலயங்களுக்கு மதியம் 1 மணி முதல் 3.15 மணி வரையிலும், JKL வலயங்களுக்கு 3.15 முதல் 5.30 மணி வரையிலும், EFGH வலயங்களுக்கு இரவு 7.15 முதல் 9 மணி வரையிலும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

மேலும், IGKL வலயங்களில் இரவு 9 மணி முதல் 10.45 மணி வரை மின்சாரம் தடைப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.