இன்ஸ்டாவில் மோடி புதிய சாதனை: 24 மணிநேரத்தில் 303மில்லியன் பார்வைகள்!

#India #Lanka4 #Instagram #NarendraModi #Record #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Abi
2 hours ago
இன்ஸ்டாவில் மோடி புதிய சாதனை: 24 மணிநேரத்தில் 303மில்லியன் பார்வைகள்!

இந்தியாவில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளுக்கு எதிராக, புதுடெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் மாணவர்கள் மற்றும் இளைஞர் அமைப்பினர் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்போராட்டம் தீவிரமடைந்துள்ள பின்னணியில், மாணவர்களின் கவலைகள் மற்றும் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் வகையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நள்ளிரவில் செல்ஃபி காணொளி ஒன்றை வெளியிட்டு உரையாற்றினார்.

பிரதமரின் இந்த இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் காணொளி பதிவேற்றப்பட்ட 24 மணி நேரத்திற்குள் 303 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று உலகளாவிய சாதனையை முறியடித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வரவேற்பிற்கும் இளைஞர்களின் ஆக்கபூர்வமான கருத்துக்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில், பிரதமர் மோடி "நன்றி நண்பர்களே" என்ற தலைப்பில் மற்றொரு காணொளியைப் பகிர்ந்துள்ளார். 

அதில், நாட்டின் இளைஞர்களுடனான இந்த நேர்மறையான உரையாடலும் பிணைப்பும் வரும் நாட்களில் மேலும் வலுவடையும் எனத் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4