மக்கள் மத்தியில் எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தியுள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் அரசியற் கலந்துரையாடல்!

Nila
2 years ago
மக்கள் மத்தியில்  எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தியுள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் அரசியற் கலந்துரையாடல்!

நாட்டில் தற்போது அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந் நிலையில் அரசுக்கெதிராக ஐக்கிய மக்கள் சக்தியால் பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்படவுள்ள நிலையில் தற்போது குறித்த பிரேரணைக்கு ஆதரவு திரட்டும் நடவடிக்கைகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன.

இதேவேளை காலிமுகத்திடல் மற்றும் ஜனாதிபதி செயலகம் முன்பாக தன்னார்வ அமைப்புக்கள் ஒன்றினைந்து மூன்றாவது நாளாக தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இவ்வாறான நிலையில் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியில் இருந்து மீள்வது குறித்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தலைமையில் விசேட சந்திப்பு நேற்று நடைபெற்றது.

குறித்த சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான குமார வெல்கம,பாட்டலி சம்பிக்க ரணவக்க மற்றும் அனுர பிரியதர்சன யாப்பா, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் பலர் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை கடந்த நல்லாட்சி அரசாங்கத்தினை அமைப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி பாரிய பங்கினை வகித்திருந்தார்.

இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதியின் தற்போதைய அரசியற் கலந்துரையாடல்கள் மக்கள் மத்தியில் பல்வேறு எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.