இலங்கையில் ராஜபக்சக்களினால் மோசடி செய்யப்பட்ட பணம் உகண்டா உள்ளிட்ட நாடுகளில் முதலீடு

Nila
2 years ago
இலங்கையில்  ராஜபக்சக்களினால் மோசடி செய்யப்பட்ட பணம் உகண்டா உள்ளிட்ட நாடுகளில் முதலீடு

நாட்டில் மிக அதிகளவில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டதாக ராஜபக்சர்கள் மீது குற்றம் சுமத்தப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார குற்றம் சுமத்தியுள்ளார்.

தெற்கு நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்து, 19 பில்லியன் அமெரிக்க டொலர் பணத்தை கொள்ளையிட்ட அரசியல்வாதிகள் நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட வேண்டும்.

நீதிமன்றின் ஊடாக சட்ட ரீதியாக இந்த தடை விதிக்கப்பட வேண்டும். ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட அரசியல் பிரபலங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஆட்சி பீடம் ஏறும் தரப்பினருக்கு முடியும் என்ற போதிலும், நீதிமன்றின் ஊடாக அதற்கான அனுமதியை சட்ட ரீதியாகவும் பெற்றுக்கொள்ள வேண்டும்.

ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட அரசியல்வாதிகளுக்கு எதிராக பாகிஸ்தானில் நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. இலங்கையில் இவ்வாறு மோசடிகளில் ஈடுபட்டவர்கள் பற்றிய விபரங்கள் வெளியாகி வருகின்றது.

பண்டோரா பேப்பர்ஸ் போன்ற ஆவணங்கள் ஊடாகவும் இது உறுதியாகியுள்ளது. உகண்டா உள்ளிட்ட நாடுகளிலும் இவர்கள் மோசடி செய்த பணத்தை முதலீடு செய்துள்ளனர்.

எனவே இந்த விடயங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என அவர் கோரியுள்ளார்.