IPL Match23 - மும்பை அணிக்கு 199 ரன் வெற்றி இலக்கு

#IPL #T20
Prasu
4 years ago
IPL Match23 - மும்பை அணிக்கு 199 ரன் வெற்றி இலக்கு

ஐபிஎல் கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் மும்பை -பஞ்சாப் அணிகள் மோதுகின்றன .

இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை  தேர்வு செய்தது .அதன்படி பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க வீரர்களாக தவான் ,மயங்க் அகர்வால் களமிறங்கினார் .தொடக்கம் முதல் மும்பை அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர் பந்துகளை பவுண்டரி ,சிக்சருக்கு பறக்க விட்டனர்.

அதிரடியாக விளையாடிய இருவரும் பவர்பிளே முடிவில் விக்கெட் இழப்பின்றி 65 ரன்கள் சேர்த்தது .சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். மயங்க் அகர்வால் 52 ரன்களிலும், தவான் 70 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

கடைசி நேரத்தில் ஜிதேஷ் சர்மா ,ஷாருக்கான் அதிரடி காட்ட, பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் எடுத்தது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4