காலிமுகத்திடல் தொலைத்தொடர்பு கோபுரத்தின் பின்னணி என்ன?

Nila
2 years ago
காலிமுகத்திடல் தொலைத்தொடர்பு  கோபுரத்தின் பின்னணி என்ன?

அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி காலிமுகத்திடல் தொடர் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் பகுதி கோட்டா கோ கம என பெ ஆர்ப்பாட்டக்காரர்களால் பெயர்ப் பலகை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை நேற்றையதினம் குறித்த ஆர்ப்பாட்டம் நடைபெறும் பகுதியில் தனியார் தொலைத்தொடர்பு வலையமைப்பு ஒன்றின் தொலைத்தொடர்பு கோபுரம் அமைக்கப்பட்டது.
அது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது.

குறித்த தொலைத்தொடர்பு கோபுரம் அமைக்கப்பட்தன் பின்னணி தொடர்பில் ஹைதர் அலி என்ற நபர் முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளார்.

அப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இன்று காலிமுகத்திடலில் 4G, 5G Telecommunication Tower அமைக்கப்படது, இதனை ஆர்ப்பாட்ட களத்தில் இருந்த இளைஞர்கள் தான் இதனை கோட்டா கோ கமவில் அமைத்தார்கள் என்று ஒரு தவறான செய்தி அங்காங்கே பரப்பப்படுகின்றது.

இதன் உண்மைத்தன்மை என்னவாக இருக்கும். இங்கு நாம் புரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கிய விடயம் இதனை போராட்ட களத்தில் உள்ளவர்கள் அமைக்கவில்லை, இலங்கையில் frequency அரச அனுமதியின்றி வேறு யாரும் அதனை மேற்கொள்ள முடியாது.

Telecommunication tower அமைக்க அதிகாரம் வழங்கப்பட்ட நிறுவனங்கள்தான் Dialog மற்றும் Mobitel . இந்த ஆரப்பாட்ட இடம் பெரும் பகுதி RDA வின் அதிகாரதரதுக்கு உற்பட்ட பகுதி. இந்த இடத்தில் Dialog அல்லது Mobitel நிறுவனங்களுக்கு நினைத்தது போல்அரசின் உரிய அனுமதி இன்றி Tower அமைக்க முடியாது. ஆரம்ரபத்தில் mobile phone signal தடைசெய்ய signal jammer பயன்படுத்திய அரசு திடீர் என்று 4G க்கு அனுமதிக்கிறது அதுவும் இவ்வளவு அவசர அவசரமாக என்றால் சிந்திக்க வேண்டிய விடயம் தான்.

சில நேரம் ஒரு இடத்தில் திடீர் என்று மக்கள் சனத்தொகை அதிகரித்து எதிர்பார்த்த அளவை விட கூடுதலானவர்கள் Networkல் இணைந்தால் Network தடைப்பட வாய்ப்புண்டு இந்த காரணத்துக்காக Dialog அல்லது Mobitel ஒரு Temporary Towerஐ அரச உயர் பீடத்திலிருந்து அனுமதி பெற்று அமைத்திருக்கவும் முடியும்.

அது அல்லாமல் அரச புலனாய்வுப் பிரிவு Spot identification செய்யும் மோப்பம் பிடுக்கும் நடவடிக்கையாகவும் இருக்கலாம். இந்த ஆர்ப்பாட்டம் சம்பந்தமான கண்காணிப்பில் இலங்கையின் அரச புலனாய்வு பிரிவு ஏற்கனவே படுதோல்வி அடைந்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது என பதிவிடப்பட்டுள்ளது.