எரிபொருள் விலை அதிகரிப்பு: இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் அறிவிப்பு

Mayoorikka
2 years ago
எரிபொருள் விலை அதிகரிப்பு:   இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் அறிவிப்பு

எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.  

எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் இதுவரை இறுதி இணக்கப்பாடு எட்டப்படவில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகம் ஒன்றிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

லங்கா ஐஓசி நிறுவனம் நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையை அதிகரித்துள்ளது. இதன்படி அனைத்து வகை பெற்றோல்களின் விலையும் லீற்றருக்கு 35 ரூபாவினால் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து வகை டீசல் விலையும் லிட்டருக்கு ரூ.75 உயர்த்தப்பட்டுள்ளது.

இதன்படி, IOC நிறுவனம் விற்பனை செய்யும் 92 ஒக்டேன் பெற்றோலின் புதிய விலை லீற்றர் ஒன்றின் விலை 338 ரூபாவாகும். 95 ஒக்டேன் பெற்றோலின் புதிய விலை லீற்றர் ஒன்றின் விலை 367 ​​ரூபாவாகும். ஆட்டோ டீசல் லீற்றரின் புதிய விலை 289 ரூபாவாகும். IOC நிறுவனத்தினால் விற்பனை செய்யப்படும் சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 327 ரூபாவாகும்.