மருந்துகள் இல்லை: உயிரிழப்புகள் எதிர்பாராத வகையில் அதிகரிக்கும் அபாயம்! மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை

Mayoorikka
2 years ago
மருந்துகள் இல்லை: உயிரிழப்புகள் எதிர்பாராத வகையில் அதிகரிக்கும் அபாயம்! மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை

நோயாளர்களின் உயிரைக் காப்பாற்ற தேவையான மருந்துகள் உட்பட வைத்தியசாலை உள்ளீடுகளுக்கு நாடு முழுவதும் கடும் தட்டுப்பாடு நிலவுவதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.
 
எனவே, இவ்வாரம் மருத்துவமனை அமைப்பு சீர்குலைந்து மிகவும் ஆபத்தான சூழ்நிலையை உருவாக்கும் அபாயம் இருப்பதாக சங்கம் எச்சரிக்கிறது.

கொரோனா தொற்றை விட மோசமான நிலைமை காணப்படுவதாகவும், வைத்தியசாலைகளில் அத்தியாவசிய மருந்துகள் இல்லாத காரணத்தினால் உயிரிழப்புகள் எதிர்பாராத வகையில் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாகவும் சங்கத்தின் செயலாளர் டொக்டர் செனல் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

நிலைமை குறித்து கலந்துரையாட சுகாதார செயலாளரை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியாதது தீவிரமானது என்றும் அவர் கூறினார்.