எரிபொருள் விலையேற்றம் காரணமாக தனியார் பேருந்து சேவைகள் இடைநிறுத்தம்! பேருந்து கட்டணம் அதிகரிப்பு?

Nila
2 years ago
எரிபொருள் விலையேற்றம் காரணமாக தனியார் பேருந்து சேவைகள் இடைநிறுத்தம்! பேருந்து கட்டணம்  அதிகரிப்பு?

நாட்டின் பல்வேறு இடங்களில் எரிபொருள் விலையேற்றம் காரணமாக தனியார் பேருந்து சேவைகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன.

இதனால் பல பிரதேசங்களில் தனியார ் பேருந்து சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், பல பேருந்துகள் சேவையில் இருந்து விலகியுள்ளதாக பேருந்து தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.

இதேவேளை, எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பேருந்து உள்ளிட்ட போக்குவரத்து சேவைகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில் எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் வருடாந்த பேருந்து கட்டண திருத்தம் என்பன அடிப்படையில் குறைந்த பேருந்து கட்டணம் 40 ரூபாவரை அதிகரிக்கக்கூடும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன நேற்று ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

எதிர்வரும் 2 மாதங்களில் வருடாந்த பேருந்து கட்டண திருத்தம் இடம்பெறும்.

இதன்போது டீசலின் விலை கவனத்தில் கொள்ளப்பட்டு பேருந்து கட்டணம் திருத்தப்படும்.

தற்போதைய நிலை நீடிக்குமாயின் குறைந்த பேருந்து கட்டணம் 40 ரூபா வரை அதிகரிக்கப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

அத்துடன், சில பகுதிகளில் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மற்றும் எரிவாயு விற்பனை நிலையங்கள் என்பன மூடப்பட்டுள்ளன.

திறக்கப்பட்டுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மற்றும் எரிவாயு விற்பனை நிலையங்களில்  மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.