அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 21.04.2022

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
2 years ago
அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 21.04.2022

மேஷம்
அசுவினி : இன்று முக்கிய செயல் ஒன்றை பொறுப்புடன் செய்வீர்கள்.
பரணி : உங்கள் உழைப்புக்கு ஏற்றபடி லாபம் வரும். நிதி நிலை சீராகும்.
கார்த்திகை 1 : எதிர்பார்த்த நன்மை சிறு தாமதத்திற்கு பிறகு கிடைக்கும்.

ரிஷபம்
கார்த்திகை 2,3,4 : நண்பரின் ஆலோசனையால் உங்களுக்கு நன்மை கிடைக்கும்.
ரோகிணி : குடும்பத்தில் ஒருவருக்கு எதிர்பாராத நன்மை ஒன்று நடைபெறும்.
மிருகசீரிடம் 1,2 : அலுவலகப்பணி எளிதாக முடியும். கலகலப்பு கூடும் நாள்.

மிதுனம்
மிருகசீரிடம் 3,4 : குடும்பத்தில் அமைதி உண்டு. பேச்சினால் நன்மை வரும்
திருவாதிரை : உழைப்பால் உயரும் நாள். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.
புனர்பூசம் 1,2,3 : சுபச்செய்தி காலதாமதமானாலும் உறுதியாகி விடும்.

கடகம்
புனர்பூசம் 4 : மனதிற்கு பிடித்தவரைச் சந்தித்துப் பேசி மகிழ்வீர்கள்.
பூசம் : பணியிடத்தில் புதிய யுக்திகளை கையாளுவீர்கள்.
ஆயில்யம் : உங்களுக்கு வரவேண்டிய பணம் வந்து சேரும் மகிழ்ச்சி அடைவீர்கள்

சிம்மம்
மகம் : நீண்ட நாளாக எதிர்பார்த்திருந்த நல்ல செய்தி கிடைக்கும்.
பூரம் : வியாபாரம், தொழிலில் மகிழ்ச்சியான திருப்பம் வரும்.
உத்திரம் 1 : செரிமானம் சம்பந்தமான பிரச்னை வராமல் கவனமாயிருங்கள்.

கன்னி
உத்திரம் 2,3,4: முந்தைய கடின உழைப்பிற்கான நற்பலன் இன்று கிடைக்கும்.
அஸ்தம் : குழந்தைகளால் பெருமிதம் அடைவீர்கள். மகிழ்ச்சி கூடும்.
சித்திரை 1,2 : குடும்பத்திலுள்ள ஒருவருக்கு வெளிநாட்டிலிருந்து நல்ல செய்தி வரும்.

துலாம்
சித்திரை 3,4 : கடந்த சில நாட்களாக இருந்து வந்த பிரச்னை முடிவுக்கு வரும்.
சுவாதி : பணத்தேவைகளுக்காக இன்று கூடுதலாக உழைப்பீர்கள்.
விசாகம் 1,2,3 : எதிர்காலம் பற்றிய கவலை தீரும். நன்மைகள் நடைபெறும்.

விருச்சிகம்
விசாகம் 4 : மாணவர்கள் படிப்பு, விளையாட்டில் ஆர்வம் காட்டுவார்கள்.
அனுஷம் : பெரியவர்களுக்கு உதவி செய்வீர்கள். முன்னோரின் ஆசி கிடைக்கும்
கேட்டை : தடைப்பட்டிருந்த வெளியூர், வெளிநாட்டுப் பயணம் உறுதியாகும்

தனுசு
மூலம் : சொத்து சம்பந்தமான பிரச்னைகளைப் பேசி தீர்ப்பீர்கள்.
பூராடம் : பிரியமானவர்களின் தேவை ஒன்றை நிறைவேற்றுவீர்கள்.
உத்திராடம் 1 : உங்களுக்கு ஏற்பட்டிருந்த பிரச்சனை ஒன்று முடிவுக்கு வரும்.

மகரம்
உத்திராடம் 2,3,4 : புதிய முயற்சியை கையாளுவீர்கள். பெண்கள் உதவுவர்.
திருவோணம் : குடும்பத்தினரின் உதவிகளும் ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.
அவிட்டம் 1,2 : துணிவாக எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.

கும்பம்
அவிட்டம் 3,4: உங்களால் நண்பர்கள் நன்மை அடைவார்கள். நிதி நிலை சீராகும்.
சதயம் : கலைத்துறையில் உள்ளவர்களுக்கு புதிய வாய்ப்பு தேடி வரும்.
பூரட்டாதி 1,2,3 : இன்று கிடைக்கும் நல்ல வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வீர்கள்.

மீனம்
பூரட்டாதி 4 : இன்று உடல் ஆரோக்கியத்தில் அலட்சியம் காட்ட வேண்டாம்.
உத்திரட்டாதி : குடும்பத்தினருக்கு உங்களால் நன்மை கிடைக்கும். அதிர்ஷ்டமான நாள்.
ரேவதி: உங்கள் குழந்தைகள் பாராட்டு, புகழ் மழையில் நனைவார்கள்.