நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கான பிரேரணை சபாநாயகரிடம்

Mayoorikka
2 years ago
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கான பிரேரணை சபாநாயகரிடம்

அரசியலமைப்பின் 21வது திருத்தச் சட்ட வரைவை நாளை சபாநாயகரிடம் சமர்பிக்க சுயேட்சை நாடாளுமன்றக் குழு தீர்மானித்துள்ளது. 40 பாராளுமன்ற உறுப்பினர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி தலைவர்களுக்கு இடையில் நேற்று இரவு இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் நீக்கப்பட்டு 19 ஆவது அரசியலமைப்பு திருத்தம் அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தமாக சபாநாயகரிடம் கையளிக்கப்படும் என பாராளுமன்ற சுயேட்சை குழுவின் பேச்சாளர்   தெரிவித்தார். 

தற்போதைய அமைச்சரவையின் ஊடாக இந்த வரைவை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு செய்ய முடியாத பட்சத்தில் சுயேட்சைக்குழு உறுப்பினர்களின் ஊடாக பாராளுமன்றத்தில் சட்டமூலம் சமர்ப்பிக்கப்படும் எனவும் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழித்தல் உள்ளிட்ட அரசியலமைப்பில் முன்வைக்கப்பட்டுள்ள திருத்தங்களுக்கான வரைபை சமகி ஜனபலவேகய சபாநாயகரிடம் கையளித்துள்ளது.

கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார சபாநாயகரிடம் கையளித்ததாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.