அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 22.04.2022

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
2 years ago
அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 22.04.2022

மேஷம்
அசுவினி: முயற்சிகளில் சுமாரான வெற்றி உண்டு. கலகலப்பான நாள்.
பரணி: பேச்சு, செயலில் கவனமாக இருக்க வேண்டும். சுறுசுறுப்பான நாள்.
கார்த்திகை 1: தாழ்வு மனப்பான்மை தலைதுாக்கவிட வேண்டாம்

ரிஷபம்
கார்த்திகை 2,3,4: பேச்சு, செயலில் கவனமாக இருந்தால் பிரச்னை இல்லை.
ரோகிணி: சகபணியாளரை பகைத்து கொள்ளாமல் இருப்பது நல்லது.
மிருகசீரிடம் 1,2: பெண்கள் நன்மை செய்வர். சுறுசுறுப்பானநாள்

மிதுனம்
மிருகசீரிடம் 3,4: பணியாளர்களுக்கு கவலை தீரும். குழந்தைகள் உங்களை மகிழ்விப்பர்.
திருவாதிரை: உங்கள் மீது வீண் பழி வராதபடி பார்த்துக்கொள்ளுங்கள்.
புனர்பூசம் 1,2,3: இன்று மனதில் நினைத்த சாதனை திட்டப்படி நிறைவேறும்.

கடகம்
புனர்பூசம் 4: உங்கள் அருமையை மற்றவர்கள் புரிந்து கொள்வார்கள்.
பூசம்: நீண்ட காலமாக இருந்து வரும் கடனை தீர்க்க முயற்சி எடுப்பீர்கள்.
ஆயில்யம்: விரும்பிய பொருளை வாங்குவீர்கள். அலைச்சல் கூடும்.

சிம்மம்
மகம்: சிறு சானை ஒன்றை முடிப்பதால் புத்துணர்ச்சி பெறுவீர்கள்.
பூரம்: தன்னம்பிக்கை துளிர்விடும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.
உத்திரம் 1: உங்களது முயற்சிகள் தாமதமாகப் பலன் தரும். பயம் ஒன்று நீங்கும்.

கன்னி
உத்திரம் 2,3,4: நிம்மதி வரும். வழக்கு சாதகமான திசையை நோக்கிச் செல்லும்.
அஸ்தம்: பெரியோரின் விருப்பங்களை நிறைவேற்றி அவர்களது ஆசியை பெறுவீர்கள்.
சித்திரை 1,2: மேலதிகாரி மூலம் நன்மை உண்டு. தங்கம் வாங்குவீர்கள்.

துலாம்
சித்திரை 3,4: நண்பர்களுக்கு ஆலோசனைகளை வழங்கி பாராட்டு பெறுவீர்கள்.
சுவாதி: காத்திருந்த செயலில் வெற்றி கிட்டும். கவலை ஒன்று தீரும்.
விசாகம் 1,2,3: நெருங்கிய ஒருவருக்கு அலைந்து திரிந்து உதவி செய்வீர்கள்.

விருச்சிகம்
விசாகம் 4: குடும்பத்தில் ஒருவருக்காக மற்றவர் உதவியை நாடுவீர்கள்.
அனுஷம்: புது நபரின் பாராட்டுக் கிடைக்கும். தர்ம சிந்தனை அதிகரிக்கும்
கேட்டை: புதிய செயல் மூலம் பாராட்டு வரும். செல்வாக்கு அதிகரிக்கும்.

தனுசு
மூலம்: பகை பாராட்டிய உறவினர், நண்பர்கள் இணங்கி வருவார்கள்.
பூராடம்: முன்பைவிட கவனத்துடன் சேமிக்க தொடங்குவீர்கள்.
உத்திராடம் 1: தொழில், பணியில் ஆர்வம் கூடும். பகை விலகும்.

மகரம்
உத்திராடம் 2,3,4: மனதுக்கு மகிழ்வான சந்திப்பு ஒன்று இன்று நிகழும்
திருவோணம்: பணியின் நுணுக்கத்தை அதிகாரியிடம் கற்றுக்கொள்வீர்கள்.
அவிட்டம் 1,2: அளிக்கப்பட்ட பொறுப்பை சிறப்பாக முடித்து மகிழ்வீர்கள்.

கும்பம்: 
அவிட்டம் 3,4: எதிலும் புதுமை படைப்பீர்கள். தாயாரால் நன்மை ஏற்படும்.
சதயம்: சுற்றியுள்ளோர் அன்புடன் உதவுவார்கள். நிதானமான நாள்.
பூரட்டாதி 1,2,3: திறமையுடன் செயல்படுவதால் பாராட்டுக் கிடைக்கும்

மீனம்
பூரட்டாதி 4: அத்தியாவசியமான விலை உயர்ந்த பொருள் ஒன்றை வாங்குவீர்கள்.
உத்திரட்டாதி: தகுந்த ஆலோசனை கிடைப்பதால் வெற்றி அடைவீர்கள்.
ரேவதி: மகிழ்ச்சியான திருப்பம் உண்டு. ஆரோக்கியம் பற்றிய பயம் தீரும்.