பிரித்தானியாவில் தனது 96ஆவது பிறந்த நாளை கொண்டாடிய ராணி எலிசபெத்
#UnitedKingdom
#Queen
#Birthday
Mugunthan Mugunthan
2 years ago
பிரிட்டன் அரசியாக 1952இல் பதவியேற்ற எலிசபத் ராணி, பிரிட்டனின் மிக நீண்ட காலம் பதவி வகுக்கும் அரசியாக தொடர்கிறார். அவரின் 96ஆவது பிறந்த தினத்தை, நேற்று சான்டிர்ங்ஹாம் பண்ணை வீட்டில் குடும்பத்தினருடன் கொண்டாடினார்.
முன்னதாக, இரண்டு குதிரை குட்டிகளுடன் அவர் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியிடப்பட்டது. வின்டஸர் மாளிகையில் அரசியின் மெய்காவலர்கள், பேண்ட் வாத்தியம் வாசித்து, அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.
லண்டன் ஹைட் பூங்காவில் பிரட்டன் ராணுவத்தின் மன்னர் பிரிவு படையினர், பீரங்கிகளை வெடித்து, அரசிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.