கடன் நாணயப்பரிமாற்ற கால எல்லையினை நீடித்தது இந்தியா!

Prabha Praneetha
2 years ago
கடன் நாணயப்பரிமாற்ற கால எல்லையினை நீடித்தது இந்தியா!

இலங்கைக்கான 400 மில்லியன் டொலர் கடன் நாணயப்பரிமாற்ற கால எல்லை இந்திய மத்திய வங்கியினால் நீடிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு இந்தியா வழங்கும் பன்முகப்படுத்தப்பட்டதும் தாராளமானதுமான ஆதரவு தொடர்வதாக உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கிக்கான 400 மில்லியன் அமெரிக்க டொலர் நாணயப் பரிமாற்ற கால எல்லை இந்த ஆண்டு ஜனவரியில் நிறைவடைந்தது.

இந்த நிலையில், இந்திய ரிசர்வ் வங்கியினால் தற்போதைய நாணயம் சார் ஆதரவாக, இந்த காலஎல்லை நீடிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பங்களாதேஷம் 450 மில்லியன் டொலர் பரிமாற்றக் கடனை திருப்பிச் செலுத்துவதற்கு இலங்கைக்கு மேலதிக கால அவகாசம் வழங்க இணக்கம் தெரிவித்துள்ளதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அறிவித்திருந்திருந்தார் என்பதுக் குறிப்பிடத்தக்கது.