சுயேச்சை உறுப்பினர்கள் அரசியலமைப்பை திருத்துவதற்கான முன்மொழிவுகளை சபாநாயகரிடம் சமர்ப்பித்தனர்.

#SriLanka #Independence
சுயேச்சை உறுப்பினர்கள் அரசியலமைப்பை திருத்துவதற்கான முன்மொழிவுகளை சபாநாயகரிடம் சமர்ப்பித்தனர்.

41 சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசியலமைப்பு திருத்த யோசனைகளை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் இன்று கையளித்துள்ளனர். தமக்குக் கிடைத்துள்ள அனைத்து அரசியலமைப்பு முன்மொழிவுகளையும் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் தெரிவித்தார்

20 ஆவது திருத்தச் சட்டத்தின் அம்சங்களை நீக்கிவிட்டு 19 ஆவது திருத்தத்தின் ஜனநாயக அம்சங்களை மீண்டும் அரசியலமைப்பில் இணைத்து அதிகாரத்தை சமநிலைப்படுத்துவதே இதன் நோக்கமாகும் என பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

இதேவேளை, நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பில் இன்று பாராளுமன்றத்தில் விவாதங்கள் எழுந்தன. இவர்தான் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச.
இவர்கள் அமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க மற்றும் தினேஷ் குணவர்தன.

பாராளுமன்றத்தில் ஏற்பட்ட காரசாரமான விவாதங்கள் காரணமாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று சபை நடவடிக்கைகளை இடைநிறுத்த நேரிட்டது.