உலக கோடீஸ்வரர்களிலொருவரான மார்க் ஜூக்கர்பெர்க் பாதுகாப்புக்கு இத்தனை கோடிகளா? வெளியான தகவல்

#technology #Article #today
உலக கோடீஸ்வரர்களிலொருவரான மார்க் ஜூக்கர்பெர்க் பாதுகாப்புக்கு இத்தனை கோடிகளா? வெளியான தகவல்

பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க்கின் பாதுகாப்புக்கு மட்டும் கடந்தாண்டு, இந்திய ரூபாய் மதிப்பில் 205 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

மெடா நிறுவனத்தின் ஆண்டு கணக்கு தாக்கல் மூலம் இந்த தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள், தனி விமானம், மற்றும் பாதுகாப்பு வீரர்கள் என சுமார் 26 புள்ளி 8 மில்லியன் டாலர் மார்க் ஜூக்கர்பெர்க்கிற்கு செலவிடப்பட்டுள்ளது. 2020-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 6 சதவீதம் அதிகமாகும். இவை மட்டுமின்றி அவருக்கு ஊதியமாக ஓராண்டுக்கு ஒரு டாலர் கொடுக்கப்பட்டுள்ளது.

அதாவது, இந்திய ரூபாய் மதிப்பில் வெறும் 76 ரூபாயாகும். இதே போன்று மெடா நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவரான ஷெரில் சேன்ட்பெர்க்கின் பாதுகாப்பிற்கு மட்டும் இந்திய ரூபாய் மதிப்பில் 83 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4