ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள எச்சரிக்கை!
Prabha Praneetha
3 years ago
-1-1-1-1-1.jpg)
நாட்டில் சில வங்கிகள் வீழ்ச்சியடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டின் நடுத்தர வர்க்கத்தினரும் பெரும் நெருக்கடியை எதிர்நோக்கி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வங்கியாளர்களின் விசேட மாநாடு நேற்று (22) மாலை கொழும்பில் இடம்பெற்றது.
இதில் கலந்து கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க இதனை தெரிவித்திருந்தார்.



