நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை – இலங்கை பெட்ரோலிய மொத்த களஞ்சிய முனையம்

Mayoorikka
2 years ago
நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை – இலங்கை பெட்ரோலிய மொத்த களஞ்சிய முனையம்

 நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லையென இலங்கை பெட்ரோலிய மொத்த களஞ்சிய முனையம் மீண்டும் தெரிவித்துள்ளது.

அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் தேவையான எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக முனையத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதற்காக 575 பௌசர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எரிபொருளை பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை 24 மணித்தியாலங்களும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுவதாக பெட்ரோலிய மொத்த களஞ்சிய முனையம் மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, 40,000 மெட்ரிக் தொன் டீசலை கப்பலிலிருந்து இறக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்தது.

விமானங்களுக்கு தேவையான 30,000 மெட்ரிக் தொன் எரிபொருளை கப்பலிலிருந்து இன்று இறக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க குறிப்பிட்டார்.

நாட்டின் பல பகுதிகளை சேர்ந்த எரிபொருள் நிரப்பு நிலையங்களின் ஊழியர்கள் புது வருடத்திற்கான விடுமுறையில் சென்றிருந்தமையால், எரிபொருள் விநியோகத்தில் தாமதம் ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.