பேச்சுவார்த்தையே தீர்வு - காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பேசத் தயார் - மஹிந்த

Nila
2 years ago
பேச்சுவார்த்தையே தீர்வு - காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பேசத் தயார் - மஹிந்த

இடைக்கால அரசாங்கம் ஒன்று ஸ்தாபிக்கப்பட்ட வேண்டுமாயின் அது என் தலைமையிலேயே ஸ்தாபிக்கப்படும். பிறிதொரு தரப்பினரை பிரதமராக்க பெரும்பாலான தரப்பினர் தயாரில்லை.

அரசியல் தெளிவற்றவர்களே என்னை பதவி விலகுமாறு குறிப்பிடுகிறார்கள் என மஹிந்த ராஜபக்ஷ ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது.

சமூக கட்டமைப்பில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகாண அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

வரலாற்று காலத்திலும் பல சவால்களை எதிர்க்கொண்டுள்ளோம். பிரச்சினைகளை பொறுமையுடன் கையாள வேண்டும்.

அரசியல் மற்றும் வரலாற்று சம்பவம் தொடர்பில் தெளிவில்லாதவர்கள் தான் என்னை பதவி விலகுமாறு குறிப்பிடுவதாக அறிய முடிகிறது.

பதவி விலகுமாறு பெரும்பாலான தரப்பினர் குறிப்பிடவில்லை அத்துடன் என்னிடம் எவரும் அறிவுறுத்தவுவில்லை.

கொள்கையற்ற வகையில் இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிக்க முடியாது. இடைக்கால அரசாங்கத்திற்கு சகல தரப்பினரது ஆதரவும் அவசியம். ஒருவேளை இடைக்கால அரசாங்கம் என்றதொன்று ஸ்தாபிக்கப்பட்டால் அது என் தலைமைத்துவத்தில் தான் உருவாக்கப்பட வேண்டும். பிறிதொரு தரப்பினரை பிரதமராக்கி அரசாங்கத்தை கொண்டு செல்ல எவரும் தயாரில்லை.

காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபடும் தரப்பினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட தயாராகவுள்ளேன்.

அவர்கள் எந்நேரத்திலும் பேச்சுவார்த்தையில் ஈடுபடலாம். பேச்சுவார்த்தை ஊடாகவே பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியும் என்றார்.